Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் படத்தைப் பார்த்த விஜய் – மகிழ்ச்சியில் படக்குழு!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (16:20 IST)
நடிகர் விஜய் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தை பார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனன்  நடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் முடிந்தது இதனை அடுத்து படக்குழுவினர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடினார். டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் தான் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் டாக்டர் படத்தின் எடிட்டட் வெர்ஷனை விஜய் பார்த்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி பேசப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் நெல்சன் இயக்கி இதுவரை ஒரே ஒரு படம்தான் வெளியாகியுள்ளது. இரண்டாவது படம் டாக்டர்தான். அதுவும் முதலில் ஒரு ஹீரோவை வைத்து இயக்கியுள்ளார். அதனால் அவரின் வொர்க்கிங் ஸ்டைலைப் பார்ப்பதற்காக விஜய்யே கேட்டு அந்த படத்தைப் பார்த்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

பிரபுதேவா ரஹ்மான் கூட்டணி அமைக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

புறநானூறு வேண்டாம்… இந்த நாவலை படமாக்குவோம்… சுதா கொங்கராவை அப்செட் ஆக்கிய சூர்யா!

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments