முடிவுக்கு வந்தது நெல்சனின் டாக்டர்: விஜய் படம் எப்போது?
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த டாக்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடினார்
இந்த விழாவில் இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். டாக்டர் படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது
இந்த நிலையில் டாக்டர் படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன், தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மிக விரைவில் தளபதியின் அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
முதல் கட்டமாக தளபதி 65 படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்ய இருப்பதாகவும் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது