Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் வெங்கட் பிரபு படத்தில் சிம்புவும் இருக்காரா?... லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
புதன், 17 மே 2023 (09:52 IST)
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இப்போது சென்னையில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. ஜூலை மாதத்துக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிவடையும் என சொல்லப்படுகிறது. இதனால் விஜய்யின் அடுத்த படம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் இப்போது திடீரென விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, இந்த படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் இதன் ஷூட்டிங் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் வெங்கட் பிரபு விஜய்யை சந்தித்து கதையை சொல்லி சம்மதம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவை ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க இயக்குனர் வெங்கட் பிரபு முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

40 நாட்களுக்கு முன்பே ரஜினி சார் சிகிச்சைப் பற்றி சொன்னார்… இயக்குனர் லோகேஷ் பகிர்ந்த தகவல்!

வேட்டையன் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ஹரிஷ் கல்யாண் படம்… இயக்குனர் இவரா?

பிக்பாஸ் முடியுற வரை அத பண்ணாதீங்க… விஜய் சேதுபதிக்கு நிபந்தனை வைத்த நிறுவனம்!

தார்பார் தோல்வி… வேட்டையன் ரிலீஸில் சிக்கலா?- லைகா நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விநியோகஸ்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments