Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கலான் படத்துக்காக தீவிர பயிற்சியில் மாளவிகா மோகனன்! வெளியிட்ட வீடியோ!

Webdunia
புதன், 17 மே 2023 (09:48 IST)
தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். இதுபற்றி ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் கேட்ட போது “தங்கலான் படத்துக்காக ஒல்லியான தோற்றத்தை இயக்குனர் விரும்பினார். அதற்காக பிரியாணி உள்ளிட்ட உணவுகளை சாப்பிடாமல் உடல் பயிற்சி செய்து எடையைக் குறைத்தேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் தங்கலான் படத்துக்காக சிலம்பப் பயிற்சி எடுக்கும் வீடியோக்களை இணையத்தில் பகிர, அவை வைரல் ஆகி வருகின்றன. தங்கலான் படத்தில் அவர் சிலம்ப சண்டை தெரிந்த பெண்ணாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments