Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

கண்ஃபார்ம் ஆன விஜய் வெங்கட் பிரபு படம்… ஷூட்டிங் எப்போது?

Advertiesment
விஜய்
, புதன், 17 மே 2023 (07:41 IST)
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்த படத்தினை முடித்துவிட்டு விஜய் அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என பல யூகங்கள் பரவி வருகின்றன.

இதற்கிடையில் இப்போது திடீரென விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, இந்த படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் இதன் ஷூட்டிங் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் வெங்கட் பிரபு விஜய்யை சந்தித்து கதையை சொல்லி சம்மதம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சரத்குமாருடன் இணைந்த அசோக் செல்வன் ...புதிய பட அப்டேட்