Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் 68 படத்தை இயக்குகிறாரா வெங்கட் பிரபு?... தீயாய் பரவும் தகவல்!

விஜய் 68 படத்தை இயக்குகிறாரா வெங்கட் பிரபு?... தீயாய் பரவும் தகவல்!
, செவ்வாய், 16 மே 2023 (08:07 IST)
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

இதையடுத்து விஜய் அட்லி இயக்கத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. விஜய் தனது அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர் பி சௌத்ரிக்காக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இப்போது திடீரென விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமன்னன் பட ஆடியோ ரிலீஸில் ரஜினி & கமல்?