Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் டிவி பெயரில் மோசடி.. யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என அறிக்கை..!

Advertiesment
விஜய் டிவி பெயரில் மோசடி.. யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என அறிக்கை..!

Mahendran

, வியாழன், 30 ஜனவரி 2025 (16:57 IST)
விஜய் டிவியின் பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வரும் நிலையில் இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என விஜய் டிவி தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக டிஸ்னி ஸ்டார் மற்றும்/அல்லது ஸ்டார் விஜய் ("அலைவரிசை"), அல்லது தயாரிப்பாளர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனம் பணம் கேட்பதில்லை, மேலும் எந்த ஒரு நபர்(கள் ) மற்றும்/அல்லது நிறுவனம் மற்றும்/அல்லது அமைப்பு ஆகியோருக்கு எங்கள் அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான வாய்ப்பை, பணம் செலுத்தியோ அல்லது வேறு வகையிலோ, வழங்கவோ/செயல்படுத்தவோ நாங்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை. 
 
ஸ்டார் விஜய் பெயரைப் பயன்படுத்தி வரும் இத்தகைய போலியான வாய்ப்புகள் மற்றும் அழைப்புகளிலிருந்தும் மற்றும் /அல்லது இந்த அலைவரிசையின் பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு நபர்/நிறுவனம்/ அமைப்பு போன்றவை எங்களுடைய எந்த ஒரு நிகழ்ச்சியிலாவது நடிக்கவோ/தோன்றவோ வாய்ப்பை உறுதியளித்து தனிப்பட்ட தகவல்களையோ, புகைப்படங்களையோ, காட்சித் துணுக்குகளையோ அல்லது பணத்தையோ கோருபவர்களிடமிருந்தும் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம். 
 
இத்தகைய தவறான நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் உங்களால் செலுத்தப்பட்ட பணம் அல்லது பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்களால் உங்களுக்கு ஏற்பட்ட மற்றும்/அல்லது ஏற்படக்கூடிய எந்த விதமான இழப்பு/சேதம் ஆகியவற்றுக்கு இந்த நிறுவனம் மற்றும்/அல்லது அலைவரிசை எந்த ஒரு விதத்திலும் பொறுப்புள்ளதாகவோ மற்றும்/அல்லது கடமைப்பட்டுள்ளதாகவோ இருக்காது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது… வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!