விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்த சவுந்தர்யா இது முடிவல்ல, ஆரம்பம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் பட்டத்தை வென்ற நிலையில் சவுந்தர்யா இரண்டாவது இடத்தை பெற்றார். இந்த நிலையில் அவர் தனது Instagram பக்கத்தில் "எனக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நீங்கள் எனக்கு அளித்த வாக்குகளுக்கு நன்றி. நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக நின்றதிற்கும் என்னை முழுமையாக காப்பாற்றியதற்கும் நன்றி.
உங்களில் பலர் நான் வெற்றி பெறுவதை காண விரும்பியதையும் நான் அறிந்தேன். இந்த நிகழ்ச்சியில் எனக்கு இரண்டாவது இடம் கிடைத்தது என்னுடைய சாதனை என்றாலும், இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது.
ஒரே ஒரு முறை மட்டுமே வாழ்க்கையில் கிடைக்கும் இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எனது நன்றி. இந்த பயணத்திற்கு ஆதரவாக இருந்த எனது குடும்பம் மற்றும் உற்றார் உறவினருக்கு நன்றி. இது முடிவு அல்ல, ஆரம்பம் தான். நீங்கள் அனைவரும் என் பக்கத்தில் இருந்தால் என்னால் இந்த உலகையே எதிர்கொள்ள முடியும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி" என்று தெரிவித்துள்ளார். சவுந்தர்யாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.