Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரியேறும் பெருமாளை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி!

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (17:41 IST)
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷனின் தயாரிப்பில் வெளியாகி, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இதனை இயக்குனர்கள் ராம் மற்றும் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். 


 
இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். சப்போர்டிங் ரோலில் யோகி பாபு நடித்திருந்தார். 
 
தமிழ் நாட்டின் எத்தனையோ இடங்களில் கண்டும் கேட்டு இருக்கக்கூடிய கதைதான் பரியேறும் பெருமாள் . ஆனால், அதை இயக்குனர் சொன்ன விதம் தான் இதன் வெற்றிக்கு காரணம். சமூகத்தில் வேர் பரப்பி கிடக்கும் சாதிய கொடுமைகளை திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. பல பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக எழுந்து நிற்கிறது பரியேறும் பெருமாள்.
 
படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்நிலையில் இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை விஜய் டி.வி கைப்பற்றியிருக்கிறது. இதனை அந்தத் தொலைக்காட்சி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது. 
 
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓவர் பில்டப் வேண்டாம்.. ‘கங்குவா’ பிளாப் பயத்தால் அடக்கி வாசிக்கும் சூர்யா..!

அஞ்சான் படத்துக்குப் பின் ரெட்ரோவில் மீண்டும் பாடகர் ஆன சூர்யா… !

உலகளவில் 200 கோடி வசூலைக் குவித்த ‘குட் பேட் அக்லி’…!

பூஜா ஹெக்டே இதற்கு முன் அப்படி நடித்ததில்லை… அந்த ஒரு காட்சிதான் – ரெட்ரோ சீக்ரெட் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்!

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

அடுத்த கட்டுரையில்
Show comments