வடிவேல் பாலாஜிக்காக சிறப்பு நிகழ்ச்சி… விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (16:24 IST)
மறைந்த நகைச்சுவை கலைஞர் வடிவேல் பாலாஜி நினைவாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி உருவாக்கியுள்ளது.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. வடிவேலு போன்ற தோற்றம் கொண்ட பாலாஜி தன் உடல்மொழியையும் வடிவேலு போல மாற்றிக்கொண்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார்.இவருக்கு கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையிலே இறந்துவிட்டார். 

இந்நிலையில் அவரது சகக் கலைஞர்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் அவர் பணியாற்றிய விஜய் தொலைக்காட்சி எந்த உதவியும் செய்யவில்லை என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வடிவேல் பாலாஜியின் சக கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியவர்களை ஒருங்கிணைத்து ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது. அதில் அனைவரும் வடிவேல் பாலாஜி உடனான நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றனர். அது சம்மந்தமான ப்ரோமோவை இப்போது வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments