Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டூ டூ டூ பாடலின் புதிய glimpse… படக்குழு வெளியிட்ட செம்ம தகவல்!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (09:09 IST)
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து  இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார்.

இந்த படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இப்போது ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியிடப்பட்டு ஏற்கனவே ஹிட்டாகியுள்ள டூ டூ டூ பாடலின் புதிய வீடியோ கிளிம்ப்ஸ் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியாகி இருந்த வீடியோவில் அனிருத் தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments