Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காத்து வாக்குல ரெண்டு காதல்: டப்பிங்கில் விஜய் சேதுபதியின் ரகளையான பாட்டு… விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ!

காத்து வாக்குல ரெண்டு காதல்: டப்பிங்கில் விஜய் சேதுபதியின் ரகளையான பாட்டு… விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ!
, சனி, 2 ஏப்ரல் 2022 (08:22 IST)
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை அடுத்து விஜய் சேதுபதி தனது காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி வருகிறார்.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து  இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார்.

இந்த படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இப்போது ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிய நிலையில்  விஜய் சேதுபதி தனது காட்சிகளுக்காக பேசியுள்ளார். மேலும் டப்பிங்கின் போது அவர் ஜாலியாக பாடுவதை இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிர்ச்சி சிவாவின் கலகலப்பான காமெடியில் கலக்கும் "இடியட்" விமர்சனம்!