Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தக்குரலில் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ள லாபம் படத்தின் "யாழா" பாடல் இதோ!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (14:56 IST)
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில படங்கள்  மட்டுமே இயக்கியிருந்தாலும் அத்தனை படங்களும் வித்யாசமான கதையம்சத்தில் அற்புதமான படைப்புகளாக கொடுத்தவர் இயக்குனர் ஜனநாதன். அந்தவகையில் அவரது இயக்கத்தில் வெளிவந்த  இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என அத்தனை படங்களும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். 
 
இவர் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து "லாபம் " படத்தை இயக்கிவருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கலையரசன், ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.     டி. இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். 7சிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய்சேதுபதி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம் பெறவுள்ள "யாழா" என்ற பாடலின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனது காந்தக்குரலில் ஸ்ருதி ஹாசன் பாட யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments