Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஜா படத்துக்குப் பிறகு ஒரு சூப்பர்ஹிட்… வசூலை அள்ளும் VJS ன் ‘தலைவன் தலைவி’!

vinoth
செவ்வாய், 29 ஜூலை 2025 (09:39 IST)
எதற்கும் துணிந்தவன் படத்தின் தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘தலைவன் தலைவி’ படம் நேற்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க குணச்சித்திர வேடங்களில் யோகி பாபு, சரவணன், தீபா என  ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படத்தில் விஜய் சேதுபதி ஆகாசவீரன் என்ற பரோட்டா மாஸ்டராக நடித்துள்ளார். ஆகாச வீரனுக்கும் அவர் மனைவி பேரரசிக்கும் திருமணத்துக்குப் பின்னர் அடிக்கடி நடக்கும் சண்டை சச்சரவுகளை நகைச்சுவை மற்றும் எமோஷனலாக படம் சொல்லியுள்ளது. கடந்த வாரம் வெள்ளிக் கிழமை ரிலீஸான இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனாலும் தொடர்ந்து சிறப்பான வசூலைக் குவித்து வருகிறது. முதல் வார இறுதியில் மட்டும் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மீண்டும் வேலை நாட்கள் தொடங்கியுள்ள நிலையில் இதன் பிறகு வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் மகாராஜா படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக ‘தலைவன் தலைவி’ அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகாராஜா படத்துக்குப் பிறகு ஒரு சூப்பர்ஹிட்… வசூலை அள்ளும் VJS ன் ‘தலைவன் தலைவி’!

சூரியின் ‘மாமன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸில் மீண்டும் தாமதம்!

இரண்டு ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலிஸாகும் CWC புகழின் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம்!

கமலுக்கு ‘ஆரம்பிச்சிர்லாங்களா?’.. ரஜினி சாருக்கு ‘முடிச்சிர்லாமா?’- லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தள்ளிவைக்கப்பட்ட அனிருத்தின் இசைக் கச்சேரி… மீண்டும் நடப்பது எங்கே? எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments