’ஏஸ்’ இயக்குனரை காலி செய்த விஜய் சேதுபதி.. அடுத்த பலியாடு யார்?

Mahendran
திங்கள், 26 மே 2025 (13:22 IST)
விஜய் சேதுபதி நடிப்பில், ஆறுமுககுமார்  இயக்கத்தில் உருவான ’ஏஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில்  வெளியானது. இந்த படத்தின் ரிசல்ட் சுமாராக இருந்ததால், தற்போது தியேட்டரில் கூட்டம் குறைந்துவிட்டதாகவும், வசூல் அடிவாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
அது மட்டுமின்றி, இந்த படத்திற்கு சரியான ப்ரொமோஷனும் இல்லை என்றும் கூறப்படுகிறது. படம் வெளியானதே பலருக்கு தெரியவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
ஏற்கனவே, ஆறுமுககுமார்  இயக்கிய 'ஒரு நல்ல நாள் பார்த்து கதை சொல்கிறேன்' என்ற படம் படுதோல்வி அடைந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ’ஏஸ்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இந்த படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாததை அடுத்து, இயக்குனரின் சினிமா கேரியரே கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
ஒரு படத்தில் எவ்வளவு பெரிய ஹீரோ இருந்தாலும், அந்த படத்தின் கதை சரியாக இருந்தால்தான் மட்டுமே ஓடும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' இருந்தது என்றும், எனவே பெரிய நடிகர்களாக இருந்தாலும் சரி, பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் சரி, கதையில் கவனம் செலுத்தாவிட்டால் இந்த மாதிரி நிலை ஏற்படும் என்றும் இந்த படத்தின் ரிசல்ட் மூலம் உணர முடிகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகிழ் திருமேனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர்!

டிசம்பர் மாதம் கேரளாவில் தொடங்கும் சூர்யாவின் 47 ஆவது படத்தின் ஷூட்டிங்!

எனக்கெதிராக போர் நடந்தால் போராட வேண்டும்… வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா விருப்பம்!

கல்கி & ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?... முதல் முறையாக மௌனம் கலைத்த தீபிகா படுகோன்!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்?... தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments