Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Final Destination பார்த்தபோது இடிந்து விழுந்த தியேட்டர்! மயிரிழையில் தப்பிய மக்கள்!

Prasanth Karthick
திங்கள், 26 மே 2025 (11:03 IST)

ஹாலிவுட் படமான ஃபைனல் டெஸ்டினேஷனை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஹாலிவுட் திரைப்படங்களில் Final Destination திரைப்பட தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஒரு பெரும் விபத்தை முன்கூட்டியே கணிக்கும் பெண் ஒருத்தி அதிலிருந்து பலரையும் காப்பாற்றுவாள். ஆனால் அவர்கள் அதற்கு பிறகு விதியின் சதியால் கொடூரமான வகையில் மரணத்திற்கு உள்ளாவார்கள்.

 

இந்த படம் 2000ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த நிலையில் அடுத்தடுத்து பல பாகங்கள் வெளியானது. அப்படியாக தற்போது Final Destination Bloodlines என்ற புதிய பாகம் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் இதுபோன்ற எதிர்பாராத துர் மரணங்கள் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

 

இந்த படத்தை அர்ஜெண்டினாவில் உள்ள தியேட்டர் ஒன்றில் பலர் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த திரையரங்க மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் பலரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து உயிர் தப்பிய ஒருவர் பேசியபோது, “முதலில் எல்லாறும் அலறவும் படத்தில்தான் இப்படி நடக்கிறது என நினைத்தேன், என் மீது சிறு பகுதி விழுந்தபோதுதான் பதறி அடித்து ஓடினேன்” என்று கூறியுள்ளார்.

 

Final Destination படம் பார்க்கும்போது அந்த படத்தில் வருவது போன்றே ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments