Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்த வாரத்தில் இரண்டு விஜய் சேதுபதி படங்கள்?

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (17:35 IST)
அடுத்தடுத்த வாரத்தில் இரண்டு விஜய் சேதுபதி படங்கள் தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது.
 


 

‘ரேனிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘கருப்பன்’. இந்தப் படத்தில் ஹீரோயினாக தன்யா நடிக்க, வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் ‘புரியாத புதிர்’, செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மெல்லிசை’ என்று முதலில் பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தில், காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகுமா? இல்லை, ‘கருப்பன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகுமா என்பது தெரியவில்லை.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments