சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', விஜய்சேதுபதியின் 'நானும் ரவுடிதான்' உள்பட பல படங்களில் நடித்துள்ள ராகுல் தாத்தாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக 'நானும் ரவுடிதான்' படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது
இந்த நிலையில் நயன்தாராவுடன் 'நானும் ரெளடிதான்' என்ற ஒரே படத்தில் நடித்துள்ள ராகுல்தாத்தா நயன்தாராவுக்கு எழுதிய காதல் கடிதம் ஒன்றை கவிதை வடிவில் எழுதியுள்ளார். இந்த கடிதம் இணையதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த காதல் கவிதை என்னவென்று பார்ப்போமா!
கண்ணே நயன்... நீதான் என் குயின்...
நான் வாங்கி தரேன் ஒரு சவரன் செயின்...
I Know நீ ஒரு lady lion...
ஆனா உன்னை நினைச்சாவே வருது Rain...
உன்னால எத்தனை Pain. அதனால குடிச்சேன் ஒயின்...
அதனால போலீஸ்காரனுக்கு கொடுத்தேன் ஃபைன்...
காதுமா...என் Face ஆயிடுச்சு Shine...நீதான் என் ஹீரோயின்...
இப்படிக்கு...
ராகுல் தாத்தா