Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சங்கர மடம் விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை: நடிகர் விஜய் சேதுபதி கடும் தாக்கு!

சங்கர மடம் விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை: நடிகர் விஜய் சேதுபதி கடும் தாக்கு!
, சனி, 27 ஜனவரி 2018 (13:55 IST)
கடந்த 23-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது காஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
 
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார் என தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், தமிழ் தேசியவாதிகள், நெட்டிசன்கள், பொதுமக்கள் என பலதரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதியும் தற்போது பேசியுள்ளார். திருவெறும்பூரில் நடைபெற்ற திருச்சி படைக்கலன் தொழிற்சாலை பொன்விழா ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஜய் சேதுபதி பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார்.
 
அதில் மத்திய அரசின் பாராமுகம் குறித்தும் பேசினார். மேலும் தமிழ்த்தாய் சர்ச்சை குறித்துப் பேசிய அவர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதார் இணைக்காவிட்டால் கேஸ் கிடையாது; எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி