இசையமைப்பாளர் ஆகிறாரா விஜய் சேதுபதி?

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (18:08 IST)
விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றுக்கு இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

விஜய் சேதுபதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தை இயக்கி தயாரித்தார் ஆறுமுக குமார். அந்த படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகராக மட்டும் இல்லாமல் இசையமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே விஜய் சேதுபதி ஆரஞ்ச் மிட்டாய் படத்துக்கு வசனம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு தவிர இப்படி பல விஷயங்களிலும் விஜய் சேதுபதி ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கூடுதல் அம்சமாக வடிவேலு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யீன் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் அசத்தல் க்ளிக்ஸ்!

வெண்ணிற உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் அசத்தல் க்ளிக்ஸ்!

பிரபல ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி… இசை நிகழ்ச்சி ரத்து!

‘தேரே இஷ்க் மெய்ன்’ முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!

தனுஷ் கதையை நிராகரித்தாரா ரஜினிகாந்த்?... திடீரெனப் பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments