Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி- மணிகண்டன் கூட்டணி… பிரபல ஓடிடிக்காக புதிய படம்!

Advertiesment
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி- மணிகண்டன் கூட்டணி… பிரபல ஓடிடிக்காக புதிய படம்!
, புதன், 2 நவம்பர் 2022 (15:03 IST)
விஜய் சேதுபதி கூட்டணி ஏற்கனவே ஆண்டவன் கட்டளை மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் முருகேசன் என்ற வயதான தாத்தா நடித்திருந்தார். இந்த படம் பல விருதுகளை வென்றது. ஆனால் திரையரங்கில் இந்த படம் எதிர்பார்த்த அங்கீகாரத்தைப் பெறவில்லை.

இதையடுத்து இப்போது இயக்குனர் மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தயாரிப்பில் நேரடி ஓடிடி திரைப்படமாக வெளியாகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படம்.. எப்போ?