இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி. இந்த படம் மே மாதம் வெளியாகி திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.
இதையடுத்து லைகா நிறுவனம் அவரை ரஜினிக்கு கதை சொல்ல வைத்து, இந்த படத்தை உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இப்போது நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசியாக இருவரும் இணைந்து குசேலன் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.