விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வந்துள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் விஜய் சேதுபதி நடித்து வரும் 46வது திரைப்படத்தை கடந்த சில மாதங்களாக இயக்கி வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்,சி பழனி, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதாக படக்குழுவினர் அப்டேட் செய்து உள்ளனர். மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன், குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்