Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“கமர் சார் ஒரு செங்கடல் என்றால்… இவர் கருங்கடல்..” விஜய் சேதுபதியை பாராட்டிய பிரபல நடிகர்!

“கமர் சார் ஒரு செங்கடல் என்றால்… இவர் கருங்கடல்..” விஜய் சேதுபதியை பாராட்டிய பிரபல  நடிகர்!
, வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:51 IST)
நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் தன்னுடைய கருத்துகளை வித்தியாசமாக வெளியிடுவதில் வல்லவர்.

சமீபத்தில் அவர் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்போது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பற்றி புகழ்ந்து முகநூலில் பேசியுள்ளார்.

அந்த பதிவில் “ஆண்களில் ஷாரூக்கான் பெண்களில் Katrina Kaif இருவரையும் பிரமிக்க செய்து கொண்டிருப்power-ஐ சந்தித்தேன்.நேசிக்கும் கிளியும்,வாசிக்கும் பியானாவும்,யோசிக்கும் புதிய மார்க்கமாய் கண்டு ரசித்தேன் ரம்யமாய்!
கமல் சார் செங்கடல் என்றால் இவர் கருங்கடல்.
கடலாய் இருவருக்குமே அறிவின் அலை கரை நீள்கிறது.பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். நேசிக்கக் விரும்புகவர்களை நெருங்கக் கூடாதென்பார்கள்.நெருங்கியப் பின்னும்
அதிநேசம் கொள்பவராய் இருந்தார்.தித்திப்பின் சுவை நாவினில்.சந்திப்பின் தித்திப்பு அதை அசை போடுகையில்…" எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் பலி