சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் நலன் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகளாக இயக்குனர் நலன் இதுவரை எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். முதலில் ஆர்யா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் மூலம் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு கார்த்தி, தன்னுடைய ஆஸ்தான தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவுடன் இணைய உள்ளார். ஞானவேல் ராஜா தற்போது பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் அவரை கைதேற்றி விட சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அவருக்காக கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.