Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு டீசர்தான்… பெரிய தொகைக்கு முடிந்த ‘தலைவன் தலைவி’ ஓடிடி வியாபாரம்!

vinoth
வியாழன், 29 மே 2025 (09:41 IST)
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.

இதனால் பாண்டிராஜ் தன்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதையை உருவாக்க ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். அதையடுத்து பாண்டிராஜ் இப்போது விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘தலைவன் தலைவி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் சரவணன் உள்ளிட்டவர்கள் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வீடியோ சமீபத்தில் ரிலீசானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் செல்ல சண்டை போடுவது போன்ற காட்சியை வெளியிட்டிருந்தனர். அந்த டீசர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அந்த படத்தின் டிஜிட்டல் உரிமை அமேசான் ப்ரைம் தளத்தால் சுமார் 24 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ட்ரெய்ன்’ படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாமல் இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 தமிழ்ப் படங்கள்… ஒரு பிறமொழிப் படம்… நாளை ரிலீஸாகும் 6 படங்கள்!

கூலி படத்துக்குப் பிறகு ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கும் பிரபல ஹீரோ!

சிம்பு படத்தில் நடிக்கிறாரா ஜாக்கி சான்..? இணையத்தில் பரவும் தகவல்!

சென்னையில் தனுஷ்& நாகார்ஜுனா நடிக்கும் ‘குபேரா’ ஆடியோ ரிலீஸ்… எப்போது தெரியுமா?

அடுத்தடுத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் ரி ரிலீஸ் திட்டம்… தயாரிப்பாளர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments