Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெர்ரி கிறிஸ்துமஸ்… விஜய் சேதுபதியின் படம் குறித்த சுவாரஸ்ய செய்தி!

மெர்ரி கிறிஸ்துமஸ்… விஜய் சேதுபதியின் படம் குறித்த சுவாரஸ்ய செய்தி!
, வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:03 IST)
அந்தாதூன் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்  ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு இப்போது மெர்ரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. புனேவை சுற்றியுள்ள பகுதிகளில் 30 நாட்களில் இந்த படத்தை முடிக்கவுள்ளார் இயக்குனர். 90 நிமிடம் ஓடக்கூடிய த்ரில்லர் படமாக இதை உருவாக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு இண்டர்வெல்லே கிடையாது என்றும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலுடன் நடிக்க மறுத்த அரவிந்த் சுவாமி… அதுவும் 2 படத்தில்!