Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெக்வஸ்டை ஏற்காததால் ஆத்திரம்! – மாணவியை ஆபாசமாக சித்தரித்த உறவினர் கைது!

Advertiesment
ரெக்வஸ்டை ஏற்காததால் ஆத்திரம்! – மாணவியை ஆபாசமாக சித்தரித்த உறவினர் கைது!
, புதன், 10 பிப்ரவரி 2021 (12:16 IST)
இன்ஸ்டாகிராமில் ப்ரெண்ட் ரெக்வெஸ்டை ஏற்காததால் மாணவியை ஆபாசமாக சித்தரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த 17 வயது பெண் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் Fashion Designing படித்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் உபயோகித்து வரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான நபர் ஒருவர் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து தனது டைம்லைனில் பதிவேற்றியுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் அளித்த புகாரின்பேரில் அந்த நபரின் ஐபி அட்ரெஸை கண்டறிந்து போலீஸார் சேலத்தை சேர்ந்த பரசுராமன் என்பவரை கைது செய்தனர்.

மாணவியின் உறவினரான பரசுராமன் தனது சொந்த ஐடியிலிருந்து மாணவிக்கு ரெக்வெஸ்ட் செய்துள்ளார். ஆனால் அதை மாணவி ஏற்காத நிலையில் போலி ஐடி தயார் செய்து மாணவிக்கு ரெக்வெஸ்ட் கொடுத்து இவ்வாறான மார்பிங் வேலைகளை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து மொபைலை பறிமுதல் செய்த காவல்த்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உயரவில்லை: அமைச்சர் விளக்கம்