Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யா விஜய் சேதுபதி நடிக்கும் ஃபீனிக்ஸ் திரைப்படத்தின் டீசர் எப்படி?

Advertiesment
சூர்யா விஜய் சேதுபதி நடிக்கும் ஃபீனிக்ஸ் திரைப்படத்தின் டீசர் எப்படி?

vinoth

, திங்கள், 17 ஜூன் 2024 (06:50 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார். இப்போது விடுதலை 2 படத்தில் அவர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  Phoneix (வீழான்) என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

இந்நிலையில் இப்போது தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் அதகளமாக உருவாகியுள்ள டீசர் கிக்பாக்ஸிங், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மற்றும் அரசியல் கதைக்களம் என பலவற்றை உள்ளடக்க்கியதாக உள்ளது. முதல் படத்திலேயே ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் வைத்து மாஸ் ஹீரோவுக்கான பில்டப்போடு  சூர்யாவை டீசரில் காட்டியுள்ளார்கள்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2024 ஆம் ஆண்டில் இதுதான் உச்சம்… மகாராஜா திரைப்படம் படைத்த சாதனை!