Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி!

Advertiesment
தமிழக முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி!
, திங்கள், 19 அக்டோபர் 2020 (18:19 IST)
தமிழக முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி!
முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று பலத்த எதிர்ப்புகள் திரை உலகிலும் அரசியல்வாதிகள் மத்தியில் எழுந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ளலாம் என்று முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார்
 
இந்த அறிக்கைக்கு பதில் கூறிய விஜய் சேதுபதி ’நன்றி வணக்கம்’ என்று பதிலளித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதிலிருந்து விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகி விட்டதாக கருதப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவருடைய தாயார் மறைவுக்கு விஜய்சேதுபதி ஆறுதல் கூறினார் மேலும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயாரின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது 
 
அப்போது 800 படம் குறித்து விஜய் சேதுபதி பேசினாரா என்பது குறித்துதகவல் எதுவும் இல்லை இந்த நிலையில் முதல்வரை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, ‘நன்றி வணக்கம் என்று கூறியதிலிருந்து அனைத்தும் முடிந்து விட்டது இனிமேல் இது குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு விஜய் சேதுபதி சென்றுவிட்டார் 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விஜய் சேதுபதி திடீரென சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லாம் முடிஞ்சிட்டு சார்.. அவ்ளோதான் கிளம்புங்க! – விரக்தியில் பேசிய விஜய் சேதுபதி!