Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனது தம்பியை தேர்தலில் நிறுத்திய முரளிதரன் – பின்னணி என்ன?

தனது தம்பியை தேர்தலில் நிறுத்திய முரளிதரன் – பின்னணி என்ன?
, திங்கள், 19 அக்டோபர் 2020 (17:44 IST)
800 படத்தின் மூலம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள முரளிதரன் தனது தம்பியை கோத்தபய ராஜபக்சே ஆதரவுடன் தேர்தலில் நிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

800 பட சர்ச்சையால் முரளிதரனுக்கு ஆதரவாக ஒரு பிரிவும், முரளிதரன் மலையகத் தமிழர் என்பதால் இந்த படத்தை எதிர்க்கிறார்கள் என ஒரு பிரிவும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தையா முரளிதரன் வெறும் கிரிக்கெட்டர் மட்டுமல்ல என்றும் அவர் ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய தொடர்புடையவர் என்பதும் பற்றி நரேன் ராஜகோபாலன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு.

முத்தையா முரளிதரனுக்கு சில்லறையை சிதற விடும் எத்தனை பேர்களுக்கு முத்தையா பிரபாகரனை தெரியும்?

அந்த முத்தையா பிரபாகரன் முரளிதரனின் தம்பி என்பதும், அவர் நுவரேலியாவில் நடந்த முடிந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர் என்பதும், அந்த தொகுதியே கோத்தபய ராஜபக்சே முரளிக்காக கொடுத்தது என்பதும் எத்தனை பேருக்கு தெரியும் ?

முரளி அந்த தேர்தலில் சகோதரனுக்காக பிரசாரம் மேற்கொண்டார் என்பதும், தனக்கு நேரடி அரசியல் ஆர்வம் இல்லாத காரணத்தினால் தான், ஜனாதிபதி கேட்டும் தான் நிற்காமல், தன்னுடைய சகோதரனை முன்நிறுத்தியதையும் பிரசாரத்திலே முழங்கினார். இது எத்தனை பேருக்கு தெரியும் ?

இதெல்லாம் செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்தவர்கள் தான், முரளி ஒரு கிரிக்கெட்டர் மட்டுமே என்று நன்றாக அல்வா பிசைந்து கொண்டு இருக்கிறார்கள். முரளி இன ஒழிப்பாளர்களான ராஜபக்சே சகோதரர்களோடு மிக ஆழமான உறவுடையவர் என்பதை அவரை ஒரு போதும் மறைத்ததில்லை. ஆனால், முரளிக்கு முட்டு கொடுக்கும் முட்டாப்பீசு கும்பல் தான் இப்போது அம்பலப்பட்டு நிற்கிறது.

கூடிய விரைவில் விஜய் சேதுபதி, முரளிதரன் முடிவோடு ஒத்துக் கொண்டு அறிக்கை வெளியிடுவார் என்று நம்புகிறேன். முதலில் அது வரட்டும். அதற்கு பிறகு, 800 படத்தினை இந்திய ஒன்றியத்தின் எங்கேயும் எடுக்க முடியாத அடுத்த கட்ட நிகழ்வினை நோக்கி நகர்வோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 வயசுல வாழக்கை முடிஞ்சிடுச்சுனு சொல்வாங்க… ஆனா எனக்கு ? மொட்ட ராஜேந்திரன் வெளியிட்ட புகைப்படம்!