Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’

முதல் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’
, புதன், 28 செப்டம்பர் 2022 (14:55 IST)
நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். விமர்சன ரீதியாக இந்த படம் பாராட்டுகளைப் பெறவில்லை என்றாலும், வசூலில் சோடை போகவில்லை.

இந்த படம் ஒட்டுமொத்தமாக திரையரங்குகள் மூலமாக 66 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர். அதையடுத்து ஓடிடியிலும் இந்த படம் ரிலீஸானது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியேட்டர் உரிமையாளர்களுக்கு நடிகர் விக்ரம்மின் கோரிக்கை!