Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனரை மிரட்டியது விஜய் சேதுபதி ரசிகர்களா? – பரபரப்பு தகவல்!

Advertiesment
இயக்குனரை மிரட்டியது விஜய் சேதுபதி ரசிகர்களா? – பரபரப்பு தகவல்!
, புதன், 28 அக்டோபர் 2020 (11:28 IST)
இயக்குனர் சீனு ராமசாமி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்த நிலையில், இயக்குனருக்கு மிரட்டல் விடுத்தது விஜய் சேதுபதி ரசிகர்கள் என வெளியாகியுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. கிராமம் சார்ந்த கதைகளங்களை திறம்பட இயக்குபவர் என பெயர் பெற்ற இவர் விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது ட்விட்டரில் தனது உயிருக்கு ஆபத்து என்றும், முதல்வர் உடனடியாக உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் தான் விஜய் சேதுபதிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக சிலர் போலியான செய்திகளை பரப்பியுள்ளதாகவும் அதனால் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இயக்குனர் சீனு ராமசாமியை மிரட்டியது விஜய் சேதுபதி ரசிகர்களா என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டின்னருக்கு சென்றால் நான் பணமே எடுத்து செல்வதில்லை – ரசிகரின் கேள்விக்கு ஷாருக் கான் பதில்!