Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் உயிருக்கு ஆபத்து.. காப்பாத்துங்க! – முதல்வருக்கு பிரபல இயக்குனர் கோரிக்கை!

என் உயிருக்கு ஆபத்து.. காப்பாத்துங்க! – முதல்வருக்கு பிரபல இயக்குனர் கோரிக்கை!
, புதன், 28 அக்டோபர் 2020 (10:04 IST)
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு அவசரமாக உதவுமாறும் பிரபல இயக்குனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. கிராமம் சார்ந்த கதைகளங்களை திறம்பட இயக்குபவர் என பெயர் பெற்ற இவர் தற்போது ட்விட்டரில் இட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்.” என கூறியுள்ளார். இதனால் அவருக்கு யாராவது கொலை மிரட்டல் விடுத்துள்ளார்களா? என்ற பதட்டம் எழுந்துள்ளது. என்ன பிரச்சினை என்பது குறித்து அவர் விளக்கம் தராத நிலையில் அவருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு சில காவல் அதிகாரிகளை மென்சன் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டில் சரியான சண்டை - பாலாவை ஆள் வச்சு அடிச்சுடுவாங்க போல!