Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிக்கும் மௌனப்படம்… வெளியான செம்ம அப்டேட்!

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிக்கும் மௌனப்படம்… வெளியான செம்ம அப்டேட்!
, வெள்ளி, 6 மே 2022 (17:07 IST)
விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படமான காந்தி டாக்ஸின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

விஜய்சேதுபதி தனது கைவசம் இப்போது 10 படங்கள் வரைக் கைவசம் வைத்துள்ளார். அதில் 3 இந்தி படங்களும் அடக்கம். இந்நிலையில் இப்போது அவர் இப்போது மௌனப்படமாக உருவாகும் காந்தி டாக்ஸ் திரைப்படத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கிஷோர் பாண்டுரங்க் பெலேகார் இயக்குகிறார்.

கடந்த ஆண்டே இந்த படம் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நகைச்சுவை கேலி திரைப்பரமாக இந்த படம் உருவாக உள்ளது. இதற்கு முன்னர் சமீபத்தில் பேசும்படம் மற்றும் மெர்க்குரி ஆகிய மௌனப் படங்கள் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’3’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் ஏற்ற வேடம்… டான் படத்தின் சர்ப்ரைஸ்!