Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறனின் கதையில் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி & சசிகுமார்!

vinoth
வியாழன், 17 ஏப்ரல் 2025 (12:48 IST)
எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களின் மூலமாக இயக்குனராக அறியப்பட்ட துரை செந்தில்குமார் , சூரியை வைத்து இயக்கிய கருடன் திரைப்படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அவர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஏற்கனவே அவர் விஷாலுக்கு  துரை செந்தில்குமாருக்கும் தனித்தனியாக அட்வான்ஸ் கொடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்து துரை செந்தில் குமார் அடுத்து விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கான கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் லாரன்ஸ் நடிப்பில் ‘அதிகாரம்’ என்ற தலைப்பில் உருவாக இருந்த கதையைதான் தற்போது மாற்றங்கள் செய்து உருவாக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வைரலாகும் உடற்பயிற்சி வீடியோ: 'பவர்ஹவுஸ்' எனப் புகழும் ரசிகர்கள்!

பிபாஷா பாஸு ஆண்கள் போல உள்ளார்… கிண்டல் அடித்த மிருனாள் தாக்கூர்…!

நீதிமன்றம் போய் தடை வாங்கியும் எந்த பயனும் இல்ல… முதல் நாளே இணையத்தில் வெளியான ‘கூலி’!

ஸ்கேம்ஸ்டர் … புலம்பித் தள்ளும் ரசிகர்கள்… உடைந்ததா லோகேஷ் bubble…?

ரோலக்ஸ் டெம்ப்ளேட்…. சுத்தமாக எடுபடாத அமீர்கான் கேமியோ – ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments