குட் பேட் அக்லி படத்தில் விருப்பமில்லாமதான் அந்த வசனத்தைப் பேசினேன்… பிரசன்னா ஓபன் டாக்!

vinoth
வியாழன், 17 ஏப்ரல் 2025 (12:35 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

வசூலில் பெரிய அளவில் சாதித்து வரும் இந்த படம் தமிழக அளவில் மட்டும் இன்று 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இந்த படம் விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டும் என்றும் மேலும் 250 கோடி ரூபாய்க்கு மேலாக திரையரங்குகள் மூலமாக எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரசன்னா “என்னால் ஆதிக்கின் டைரக்‌ஷன் ஸ்டைலைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. திடீரென்று ஒரு நாள் தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி, புன்னகை அரசி வசனத்தைப் பேச சொன்னார். நான் விருப்பமில்லாமல்தான் அந்த வசனத்தைப் பேசினேன். கடைசி வரை அவர் என்ன எடுக்கிறார் என்றே எனக்குப் புரியவில்லை. ஆதிக் கூட அடுத்த படம் பண்ணினால் கதையை புரிஞ்சிகிட்டு நடிக்க ஆசைப்படுறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படம்: இந்த பிரபல நடிகர் தான் ஹீரோவா?

மாரி செல்வராஜ் - இன்பநிதி' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறதா? என்ன காரணம்?

கரூர் சம்பவ காட்சிகள் ‘ஜனநாயகன்’ படத்தில் வருகிறதா? தீயாய் பரவும் வதந்திகள்..!

மாடர்ன் உடையில் அசத்தும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

சேலையில் சிக்கென்ற போஸில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments