Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

Siva
ஞாயிறு, 22 ஜூன் 2025 (18:19 IST)
நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் தான் அவரது கடைசி திரைப்படம் என்றும், இந்த படத்தை தொடர்ந்து அவர் முழுநேர அரசியலில் களமிறங்குவார் என்றும் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது விஜய் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அப்போது, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மமீதா பைஜூ, விஜய்யிடம், "இதுதான் உங்களுக்குக் கடைசி திரைப்படமா? எல்லோரும் அப்படி சொல்லி கொண்டிருக்கிறார்களே?" என்று கேட்டபோது, அதற்கு விஜய், "தெரியவில்லை. தேர்தல் முடிவை பொறுத்துதான் அது தெரியும்," என்று பதிலளித்ததாக மமீதா பைஜூ சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
இந்த வெளிப்படையான பதிலின் மூலம், வரும் தேர்தலில் விஜய் வெற்றி பெற்றால் அவர் தொடர்ந்து அரசியலில் முழு வீச்சில் ஈடுபடுவார் என்றும், ஒருவேளை தேர்தலில் தோல்வியடைந்தால் மீண்டும் சினிமாவுக்கு வந்துவிடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments