Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

Siva
புதன், 4 ஜூன் 2025 (17:12 IST)
விஜய் நடித்த ஜனநாயகன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் தான் வெளியாக உள்ளது என்பதும், அதுவரை இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதை வித்தியாசமாகவும் புதுமையாகவும் நடத்த வேண்டும் என்று விஜய் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
 
குறிப்பாக, ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெறுபவர்கள் மட்டும்தான் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறையை செயல்படுத்தலாமா என்ற எண்ணம் உள்ளது. ஆன்லைனில் இலவசமாகவே இசை வெளியீட்டு இருக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் என்று அறிவித்து, ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்களையும் இந்த விழாவுக்கு வரவழைக்க வேண்டும் என்றும், அப்போதுதான் தான் பேசும் அரசியல் மக்கள் மத்தியில் எடுபடும் என்றும் விஜய் ராஜதந்திரமாக யோசிப்பதாக கூறப்படுகிறது.
 
இருப்பினும், இது இந்த ஆலோசனை ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாகவும், இதில் ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யப்படும் என்றும், இல்லையெனில் மாற்றுவழி யோசிக்கப்படும் என்றும் விஜய் வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments