Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரல் ஹிட் அரபிக் குத்து: சிவகார்த்திகேயனிடம் விஜய் சொன்னது என்ன தெரியுமா?

வைரல் ஹிட் அரபிக் குத்து: சிவகார்த்திகேயனிடம் விஜய் சொன்னது என்ன தெரியுமா?
, செவ்வாய், 8 மார்ச் 2022 (09:43 IST)
விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இணையத்தில் தெறி ஹிட் அடித்து வருகிறது.  தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆகி உள்ளது.

இந்த பாடல் வெளியானது முதல் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் முதல் திரை உலகினர் வரை இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 12 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது. இதைத் தங்களுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இந்நிலையில் இன்று அந்த பாடல் 125 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. தென்னிந்திய சினிமாக்களிலேயே குறைந்த நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது அரபிக்குத்து பாடல் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயனிடம் இந்த பாடல் பற்றி விஜய் ஏதாவது உங்களைப் பாராட்டினாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ‘சூப்பர் பா.  பாட்டு எழுதிக் கொடுத்ததிற்கு ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் எல்லாம் நல்லா எழுதுறியே’ என்று கூறினார். மேலும் முதல் தடவை கேட்டபோதே இது ஹிட்டாகும் என்று அனிருத்திடம் சொன்னதாகக் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரொம்ப நாளா காத்திருந்த சந்திப்பு… தனுஷ் பகிர்ந்த புகைப்படம்!