Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் 67 படத்தில் பாடல்களே இல்லையா? லோகேஷ் கனகராஜின் அதிர்ச்சி முடிவு!

விஜய் 67 படத்தில் பாடல்களே இல்லையா? லோகேஷ் கனகராஜின் அதிர்ச்சி முடிவு!
, திங்கள், 7 மார்ச் 2022 (17:09 IST)
விஜய்யின் 67 ஆவது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் பற்றிய தகவலும் வெளியாகி வருகிறது. விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜும், விஜய் 68 படத்தை அட்லியும் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே லோகேஷின் கைதி படத்தில் பாடல்கள் இல்லாமல் உருவானது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருகிறதா படையப்பா 2 ? கே எஸ் ரவிக்குமார் கதை விவாதம்!