Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மக்கள் இயக்கத்தினர் பாஜகவுக்கு ஆதரவு...

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (20:30 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்  ‘’என் மண் என் மக்கள்’’ என்ற பாதயாத்திரை சமீபத்த நடந்து வருகிறது. ராமேஸ்வரத்தில் தொடங்கிய பயணம், சிவகங்கை,புதுக்கோட்டை மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் நடைபெற்று வருகிறது.

இன்று அண்ணாமலை மதுரையில் உள்ள பகுதியில் தொண்டர்களை சந்தித்து வரும் நிலையில், இந்தப்  பாத யாத்திரையின்போது  விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் கலந்து கொண்டனர்.  அப்போது அவர்கள், ‘’தளபதி வாழ்க’’ என்று கோஷம் எழுப்பினர்.

அப்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தெற்கு மாவட்டம் கொள்கை பரப்பு தலைவர் ஜிகே பத்ரி,’’ஊழலற்ற நல்லாட்சியை எதிர்பார்க்கிறோம். ஊழல் செய்யக் கூடாதுன்னு எங்க அண்ணனும் சொல்லறாரு..இந்த அண்ணனும் சொல்லறாரு… தளபதி மூத்தவரு. இவரு இளையவரு…  நல்லதுக்கு ஆதரவு தெரிவிக்கிறதுதான் நல்ல மனுஷனுக்கு அடையாளம். அதனால், நாங்கள் இந்த கட்சிக்கு ( பாஜக)க்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளோம்’’ என்று கூறினார்.

மக்கள் இயக்கத்தினர் விஜய்யின் அறிவுரையின்படி நடந்துவரும் நிலையில், இவர்கள் விஜய்யின் உத்தரவைப் பெற்றார்களா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments