Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் அரசியலுக்கு வந்தால்...பிரபல நடிகர் கருத்து

விஜய் அரசியலுக்கு வந்தால்...பிரபல நடிகர் கருத்து
, வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (16:57 IST)
நடிகர் பிரபு விஜய்யின் அரசியல் வருகை பற்றி கருத்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும்  அக்டோபர் 20 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து நடிகர் விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில், மாணவ, மாணவிகளை அழைத்து பரிசளித்து கல்வி விழாவை நடத்தி, இதற்கு ஏற்பாடு செய்த  மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். எனவே  விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நடிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
webdunia

இந்த நிலையில்,  நடிகர் பிரபு விஜய்யின் அரசியல் வருகை பற்றி கருத்து கூறியுள்ளார். இதுபற்றி அவர் ஒரு சேனலுக்கு பேட்டியளித்தபோது  கூறியதாவது:  ‘’நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி; அதை நான் வரவேற்கிறேன். இளம் ரத்தம் அரசியலுக்கு வருவது நல்லது; என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்’’ என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களையும், வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன்- நடிகர் சிவக்குமார்