சந்திரமுகி -2 படத்தின் முதல் சிங்கில் பற்றிய அப்டேட்...

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (19:16 IST)
ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளது. 

சந்திரமுகி 1 பாகத்திற்கு வித்யாசாகர் இசையமைத்த நிலையில்,  2 ஆம் பாகத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியது.

இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள வேட்டையன் கதாபாத்திர லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் கங்கனாவின் லுக் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து,  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், இதன் முதல் சிங்கில்  ஸ்வாகதாஞ்சலி என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறி இதன் புரோமோ வீடியோவை  படக்குழு தற்போது. வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

நீல நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… வாவ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த மிருனாள் தாக்கூர்!

நான் ராமராஜனுக்காகதான் அந்தக் கதையை எழுதினேன்… பல வருடங்கள் கழித்து மிஷ்கின் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments