Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் அடுத்த படத்திலும் ஒரு விண்டேஜ் ஹீரோயின்தான்!

விஜய்யின் அடுத்த படத்திலும் ஒரு விண்டேஜ் ஹீரோயின்தான்!

vinoth

, செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (09:41 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  உருவான கோட் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படம் முதல் நாளில் உலகளவில் 126 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்க இயக்குனர் ஹெச் வினோத்  ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது குறித்தோ தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்க சிம்ரன் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக விஜய்யின் படங்களில் திரிஷா, சினேகா என முந்தைய தலைமுறையில் அவரோடு ஜோடியாக நடித்த நடிகர்கள் நடித்து  வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது சிம்ரன் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்கட தேசத்தில் கோட் சொதப்பியதால் நானிக்கு ஜாக்பாட்!