Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்கட தேசத்தில் கோட் சொதப்பியதால் நானிக்கு ஜாக்பாட்!

அக்கட தேசத்தில் கோட் சொதப்பியதால் நானிக்கு ஜாக்பாட்!

vinoth

, செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (09:34 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் வசூலில் கலக்கி வருகிறது. நான்கு நாட்களில் உலகம் முழுபதும் 288 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் தருணங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கும் நிலையில் கேரளா, ஆந்திரா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தெலுங்கில் கோட் படம் பெரியளவில் எடுபடவில்லை. அதற்கு மழை ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், படம் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதுதான் முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் கோட் படத்துக்கு முன்பே வெளியாகியிருந்த நானியின் “சரிபோதா சனிவாரம்” திரைப்படம் மீண்டும் நல்ல வசூலைப் பெற தொடங்கியுள்ளது. இதன்  மூலம் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிமாறன் வழங்கும் படத்தை ரிலீஸ் செய்யும் முன்னணி விநியோகஸ்தர்!