Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கிய ’விஜய் மக்கள் இயக்கம்’

vijay makkal iyakkam
, சனி, 15 ஜூலை 2023 (19:38 IST)
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக  #சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள காமராஜர்  திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், சமீபத்தில், 234 தொகுதிகளில் இருந்து, 10 ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களை அவர்களுடன் பெற்றோருடன் சென்னைக்கு அழைத்து கல்வி விழா நடத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் சமீபத்தில் நேரில் அழைத்து நன்றி கூறினார். அடுத்த நாள் மீண்டும் மக்கள் இயக்கத்தினரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் முடிந்த பின், மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , ‘’நடிகர் விஜய் ஜூலை 15 ஆம் தேதி  (இன்று முதல்) காமராஜர் பிறந்த நாளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்கவுள்ளதாக  நேற்று முன் தினம் பத்திரிக்கைகளுக்கு அறிக்கை அனுப்பினார்.

இந்த நிலையில், இன்று மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கி உதவி செய்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்,
தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,

#பெருந்தலைவர்_காமராஜர் அவர்களின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு.!  தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக  #சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.!

அதனைத் தொடர்ந்து #தென்சென்னை மாவட்ட இளைஞரணி ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் 400 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உட்பட எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’இங்க நான் தான் கிங்’: மாஸ் பஞ்ச் வசனத்துடன் வெளியான ‘ஜெயிலர்’ வீடியோ..!