Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ஜனநாயகன் படத்தோடு போட்டி போடும் பராசக்தி! - தயாரிப்பாளர் அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 25 மார்ச் 2025 (08:38 IST)
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகும் ‘பராசக்தி’ படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் எனப் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அறிவித்துள்ளார். இதன் மூலம் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

’இந்தியன் 2’ ‘ரெட்ரோ’வை விட மோசம்.. முதல் நாள் ‘தக்லைஃப்’ வசூல் இவ்வளவு தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments