Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’கோட்’ வெளியான திரையரங்குகளில் சிவகார்த்திகேயன் பட டிரைலர்.. கமல் அறிவிப்பு..!

’கோட்’ வெளியான திரையரங்குகளில் சிவகார்த்திகேயன் பட டிரைலர்.. கமல் அறிவிப்பு..!

Mahendran

, வியாழன், 5 செப்டம்பர் 2024 (16:05 IST)
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் இடைவேளையில் சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இடைவேளையில் அமரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என்று கூறியதை அடுத்து விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே விஜய் அரசியலுக்கு செல்ல இருப்பதால் அவருடைய இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிக்கப் போவதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது விஜய் படம் வெளியாகும் திரையரங்குகளில் சிவகார்த்திகேயன் படத்தின் டிரைலர் வெளியாக இருப்பது இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளாமர் உடையில் பீச் போட்டோஷூட் நடத்திய கௌரி கிஷன்!