Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''புது கெட்டப்பில் விஜய்''…விஜய் சேதுபதி ரிலீஸ் செய்த ''மாஸ்டர்' பட போஸ்டர்…

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (16:55 IST)
விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒருபுதிய போஸ்டரை அப்படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின்  5 வது புரோமோ சனிக்கிழமை  வெளியாகி வைரலானது. இதில் விஜய் சேதுபதி பேசும் பஞ்ச் டயலாக் இடம்பெற்றுள்ளது.

அதில், உலகத்தில எவனப் பாத்துனாலும் பயப்படலாம். ஆனா சாவ் நம்மல நெருங்கிடுச்சின்னா, எதிர்க்க ஒருக்க எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது எனப் பேசுவதுபோன்ற வீடியோ வைரலானது.

இந்நிலையில் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில்  இடம்பெற்றுள்ள  ஒரு காட்சி குறித்த புகைப்படத்தை இன்று  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், இதில், விஜய் வெறும் மோலோடு நின்று, விஜய் சேதுபதியை அடிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.

ஆக்சன் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் மாஸ்டர் படம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கண்கவர் கருநிற உடையில் அட்டகாச போஸ் கொடுத்த தமன்னா!

அடுத்த கட்டுரையில்
Show comments